LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 10, 2020

ஊரடங்கை நீடிப்பது குறித்து வைத்தியர் குழுவின் அறிக்கைப்படி பிரதமர் முடிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் 21 நாட்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை (சனிக்கிழமை) ஊரடங்கு குறித்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக 12 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

சமுதாய நோய் பரவல் தடுப்பு நிபுணர் வைத்தியர் டி.சி.எஸ். ரெட்டி உள்ளிட்டவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். நோய் கண்டறிதல் நிபுணர்கள், நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள், தொற்று நோய் தடுப்பு நிபுணர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம், உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ சபையின் பிரதிநிதிகளும் இதில் உள்ளடங்குகிறார்கள். அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வுசெய்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

அந்தவகையில், ஊரடங்கை தளர்த்துவது குறித்து பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில் நாளை பிரதமரிடம் அறிக்கை அளிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுசம்பந்தமாக அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் மருத்துவ ரீதியாக மட்டும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதா, இல்லையா என்பது குறித்து ஆலோசனை வழங்குவோம். இதனுடன் பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளையும் ஆராய்ந்து மத்திய அரசு உரிய முடிவுகளை எடுக்கும்” என்று கூறினார்.

மேலும், மருத்துவ குழுவினர் நோய் பாதிப்பு பகுதிகளை 4 மண்டலமாகப் பிரித்துள்ளனர். அதாவது 10 இலட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் 5 பேருக்கும் குறைவாக நோயாளிகள் இருந்து கடந்த ஒரு வாரமாக நோய் பரவுதல் முற்றிலும் இல்லை என்றால் அது 1ஆவது மண்டலமாக கணிக்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் மக்களில் ஒருவருக்கு மட்டுமே நோய் இருந்தால் அது 2ஆவது மண்டலமாகவும், 10 இலட்சம் மக்களில் 2 பேருக்கு நோய் இருந்தால் அது 3ஆவது மண்டலமாகவும், 10 இலட்சம் பேரில் 2இற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் இருந்தால் அது 4ஆவது மண்டலமாகவும் பிரிக்கப்படுகிறது.

இதில் முதலாவது மண்டலத்தில் மட்டும் ஓரளவு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு இந்தக் குழு சிபாரிசு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 3ஆவது மற்றும் 4ஆவது மண்டலங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நீடிக்க சிபாரிசு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல 2 ஆவது மண்டலத்திற்கு ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் சிபாரிசு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் நாளை முடிவுகளை எடுத்து ஊரடங்கு தொடர்பாக அறிவிக்கவுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7