தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலையவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக இருந்தது.
இந்நிலையில், அங்கு இன்று மட்டும் 96 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் என பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.