இங்கிலாந்தில் 866 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 87 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஏப்ரல் 8ல் 938 ஆகவும், ஏப்ரல் 9ல் நேற்று 881 ஆகவும் இருந்த இறப்புகள் இன்று 953 ஆக உயர்ந்து கறுப்புநாளாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 24 மணிநேரத்தில் இத்தாலியின் உச்ச இறப்பான 919 மற்றும் ஸ்பெயினின் உச்ச இறப்பான 950 என்ற எண்ணிக்கைகளை, பதிவு செய்த கொடிய நாட்களை பிரிட்டன் இப்போது கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனின் NHS உத்தியோகபூர்வமாக, மரணங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.