அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வறிய மக்களுக்கு எவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என ஊடகவியலாளர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “எமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களுக்கான சலுகைக் கடன் 10 ஆயிரம் ரூபாய் (சஹன பியவர) கொடுப்பனவு ஒன்று வழங்கப்படுகிறது.
அத்துடன் சமூர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்களுக்கான மானியக் கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாயினைத் தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.
இத்திட்டமானது 20 பிரதேச செயலகங்களை ஒருங்கிணைத்து ஏறத்தாழ 43 சமூர்த்தி வங்கிகளின் ஊடாகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் அம்பாறையில் ஏறத்தாழ 90 ஆயிரத்து 128 சமுர்த்தி நிவாரணம் பெறக்கூடிய குடும்பங்கள் காணப்படுகின்றன.
அதில் முதற்கட்டாக, 60 ஆயிரத்து 125 பேருக்கான சகன பியவர இலகு கடன் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இதன்படி மொத்த செலவீடாக 306 மில்லியனை சமூர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கி தற்பொழுது 5 ஆயிரம் ரூபாய் பணம் சமூர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அருணலு இலகு கடன் வசதி ஊடாக சமூர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் ஊடாக 22 ஆயிரத்து 266 குடும்பங்களுக்கு 112 மில்லியன் ரூபாய் நிதி பகிரப்பட்டுள்ளது. மேலும் இதன் மொத்த தொகை ஏறத்தாழ 418 மில்லியன் ரூபாயை இலகு கடன்களாக சமுர்த்தி நிவாரணம் பெறக் கூடிய குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றோம்.
அதற்கு மேலதிகமாக தற்பொழுது ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நாங்கள் சமூர்த்தியை பெறுவதற்கு தகுதியான குடும்பங்களுக்கான ரூபா 5000 மானியமாக வழங்கக்கூடிய வேலைத்திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் 43 சமூர்த்தி வங்கிகளின் ஊடாக நாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம்
இந்த மானியத் தொகையானது இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகின்றது முதற்கட்டமாக சமுர்த்தி உதவி தொகை பெறுவதற்காக காத்திருப்பு பட்டியல் காணப்படக்கூடிய 35133 குடும்பங்களுக்கான ரூபா 5000 வழங்கும் திட்டத்தை தற்போது நாங்கள் ஆரம்பித்துள்ளோம்
அடுத்து, கொரோனா வைரஸ் அனர்த்த நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழந்த ஏறத்தாழ 28 ஆயிரத்து 535 குடும்பத்தினருக்கான 5 ஆயிரம் ரூபாய் மானியம் இனிவரும் காலங்களில் நடைமுறைப்படும்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் சமூர்த்தி பயனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பொறிமுறையை மாவட்ட சமுர்த்தி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் மாவட்ட சமூர்த்திக் காரியாலய உள்ளக கணக்காய்வுப் பிரிவு மற்றும் வங்கியின் முகாமைத்துவப் பிரிவு 24 மணித்தியாலமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
அந்தவகையில், சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு மாவட்ட முகாமையாளர் தசநாயக்கா (0760707125), தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு மாவட்ட வங்கி முகாமையாளர் ஹனீபா (0777004761) மற்றும் உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் அமீர் அலி (0777531024) ஆகியோரைத் தொடர்பு கொண்டு முறையிட முடியும்” எனத் தெரிவித்தார்.