இதற்கமைய மே மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை மாணவர்கள் ஒரு மாதத்திற்கு 1,250 டொலர்கள் பெறுவார்கள்.
மேலும், மாணவர் ஒருவரை சார்ந்திருந்தாலோ அல்லது இயலாமையாக (மாற்று திறனாளிகள்) இருந்தாலோ அவருக்கான தொகை 1,750 வரை செல்லலாம்.
வேலை கிடைத்தாலும், ஆனால் மாதத்திற்கு 1,000 டொலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் மாணவர்களுக்கும் இந்த நன்மை கிடைக்கிறது.
கனடா வருவாய் நிறுவனம் மூலம் பணம் செலுத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.