இருந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் தெரிவித்தார்.
இதில் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 70 பேரும், சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரும் மற்றும் கொழும்பு, மருதானையைச் சேர்ந்த 8 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
கொவிட்-19 தாக்கத்திற்குள்ளானவர்கள் என சந்தேகப்பட்டு தனிமைப்படுத்தும் நிலையத்தில் கடந்த 26 நாட்கள் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்களுக்கு புத்தளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் தமது வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.