இதனிடையே, கொரோனோ வைரஸ் அறிகுறி சந்தேகத்தில் நேற்று 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்குத் தொற்று இல்லை எனபது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோ தொற்றுநோய் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனோ சந்தேகத்தில் போதனா வைத்தியசாலையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுநோய் பரிசோதனை மேற்கொண்ட 10 பேரில் 3 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்கனவே அறவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய 7 பேர் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் தனிமைப்படுத்தலில் உள்ள 20 பேரில் அடுத்த 10 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.