அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவிவருகிறது.
இந்நிலையில், கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 456 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 160 பேர் மரணித்துள்ளனர்.
மேலும், கனடாவில் மொத்தமாக 33 ஆயிரத்து 383 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து ஐந்நூறை எட்டுகிறது. இதுவரை அங்கு ஆயிரத்து 470 பேர் மரணித்துள்ளனர்.
இதனைவிட, 11 ஆயிரத்து 207 பேர் குணமடைந்துள்ள நிலையில் 557 பேர் தீவிர சிக்கிச்சைப் பிரிவிலும் 20 ஆயிரத்து 706 பேர் சாதாரண பிரிவிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கனடாவில் இதுவரை, 5 இலட்சத்து 16 ஆயிரத்து 216 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடா மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 17 ஆயிரத்து 521 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒன்ராறியோ மாநிலம் பாதிப்பில் அடுத்த இடத்தில் உள்ளதுடன் அங்கு இதுவரை 10 ஆயிரத்து 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அல்பேர்டாவில் 2 ஆயிரத்து 562 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 618 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.