இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே கடற்படையினர் ஆழ்கடலில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமையவே இன்று (சனிக்கிழமை) முற்பகல் 9.54 மணியளவில் இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் 327 கோடி ரூபாய் என்றும் இவ்வருடத்தில் மூன்று படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த மார்ச் மாதம் 30 திகதி ஆழ்கடலில் ரோந்து நடவடிக்கைக்காக சென்ற கடற்படை படகு 14 நாட்கள் இவ்வாறு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே சென்றிருந்தது. அதற்கமைய 9 நாட்களாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதுடன் , நேற்று வெள்ளிக்கிழமையே இந்த சந்தேகத்திற்கிடமான படகை அவதானித்துள்ளனர்.
இதன்போது இன்று சனிக்கிழமை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு படகொன்றை அவதானித்த கடற்படையினர் இதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த படகிலிருந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ள கடற்படையினர், படகிலிருந்து 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் மாத்திரம் கடற்படையினரால் 687 கிலோ கிராம் ஹெரோயின் , 795 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 579 கிலோ கிலோகிராம் கெட்டமைன்ட் எனப்படும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.