LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 2, 2020

2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

நேற்று ஒரே நாளில் சுமார் 450 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1949 ஆக அதிகரித்தது. 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி முறையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதில் டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள், கடந்த சில நாட்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவல் வாய்ப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 ஆயிரம் பேரின் இருப்பிடத்தை தேடும் பணி தமிழகம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி சோதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலாள் ராஜிவ் கவுபா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி நிஜாமுதீனில் மதக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மௌலானா சாத் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொற்று நோய் பரவலுக்கு காரணமாக இருந்ததாக கூறி இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மௌலானா சாத் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் நிஜாமுதீன் நிகழ்ச்சியில் விதிமீறல்கள் எதுவும் நடந்தனவா என விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

எனினும் இவ்விவகாரத்தில் மத அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கொரோனா தாக்கியவர்களுக்கு சிகிச்சை தருவதற்காக இராணுவம் 9 ஆயிரம் படுக்கைகள் மற்றும் 8 ஆயிரத்து 500 மருத்துவர்களுடன் கூடிய மருத்துவமனைகளை நாடெங்கும் தயார் நிலையில் வைத்துள்ளது. ரயில்களும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7