534 கிழக்கு கோர்டோவா வீதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையிலேயே 28 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதனை வன்கூவர் கோஸ்டல் ஹெல்த் உறுதி செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலையில் ஒரு ஊழியருக்கான ஆய்வக சோதனை நேர்மறையாக வந்தபின், குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது.
இதற்கமைய, தொழிற்சாலையில் பணிபுரிந்த 71 ஊழியர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதன் விளைவாக மேலும் 27 நேர்மறையான தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மூடப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலை மேலும் குறைந்தது 14 நாட்களுக்கு அப்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.