சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மாத்திரம் 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் பழகிய சிலரே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதுவரையில் 91 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 171 பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.