இந்த தொகை மார்ச் மாதத்தில் 2020-21ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோது இந்த ஆண்டு கடன் வாங்க எதிர்பார்க்கும் தொகையை விட நான்கு மடங்கு அதிகம்.
‘குறைந்த வருவாய் மற்றும் கூடுதல் கொவிட்-19 தொடர்பான செலவினங்கள் காரணமாக மாகாணத்தின் பற்றாக்குறை கணிசமாக பெரியதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என டோவ்ஸின் பத்திரிகை செயலாளர் ஜெர்ரிகா குட்வின் நேற்று (வியாழக்கிழமை) மின்னஞ்சலில் இந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.
‘முழுத் தொகையையும் கடன் வாங்கத் தேவையில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் எண்ணெய் விலையில் ஏற்பட்ட நிலையற்ற பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அவர் தயாராக இருக்க விரும்புகிறார் என்று குட்வின் கூறினார்