மரணங்கள் பதிவாகியுள்ளதாக NHS தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து பிரிட்டணின் மொத்த இறப்புகள் 6,227 ஆக அதிகரித்துள்ளது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 96 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இங்கிலாந்தில் மரணித்தவர்கள் 23 முதல் 102 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களில் 29 பேர் – 23 முதல் 99 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கும் தகவல்கள் இவர்களின் அடிப்படை சுகாதார நிலைமைகள் குறித்து எதுவும் தெரியாது என குறிப்பட்டுள்ளன.
நேற்று அறிவிக்கப்பட்ட 437 பேரின் இறப்பு எண்ணிக்கையில் இருந்து கிட்டத்தட்ட இன்றைய எண்ணிக்கை இரு மடங்காகும், மேலும் இது தொற்றுநோய்க்கு எதிரான போரில் பிரிட்டனுக்கு ஒரு புதிய சவாலையும் இறங்கு முகத்தையும் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், எதிர் வரும் வாரங்களில், பரவுகையும், மரணங்களும் உச்சமடையலாம் எனவும், குறிப்பாக ஈஸ்டரை அண்மித்த கணித்துள்ளனர், ஏழு நாட்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.