இதுவரை மொத்தமாக 228 பேர் மரணித்துள்ளதுடன் வைரஸ் தொற்றுக்குள்ளான 809 புதிய நோயாளர்கள் நேற்று ஒரேநாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடுமுழுவதும் மொத்தமாக 6 ஆயிரத்து 771 பேர் இதுவரை தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதுடன் 635 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.