கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்திலும் கணிசமான மக்கள் உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டுள்ளார்கள்.
குறிப்பாக, சமுர்த்தி உதவிகளைப் பெறாத அன்றாட உழைப்பினைக்கொண்டு வாழ்க்கை நடத்தும் மக்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்துவரும் நிலையில் அவர்களுக்கு திருகோணமலை நகரம் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேசசபை, மூதூர் பிரதேசசபை, வெருகல் பிரதேசசபை, பன்குளம் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை மற்றும் கிண்ணியா பிரதேசசபை அடங்கலாக திருகோணமலையிலுள்ள 6 பிரதேச சபைகளுக்கு இந்தப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதையடுத்து, குறித்த பிரதேச சபைகள் ஊடாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு குறித்த நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் இந்த காலகட்டங்களில் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான குறித்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் நலன்புரிச் சங்கத்தினால் திரட்டப்பட்ட நிதியின் மூலமாக வழங்கப்பட்டதாகவும் மக்களுடைய நலன்கள் சார்ந்த விடயங்களில் தாம் மிகுந்த கவனத்துடன் செயற்படுவதாகவும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் சண்முகநாதன் பாரதிநாதன் தெரிவித்தார்.