இன்றைய தினம் 7 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதேவேளை, இதுவரை 42 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!
இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று மட்டும் 05 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 183 பேரில் 135 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.