கொழும்பு வைத்தியசாலையில் 27 பேரும், வெலிகந்த வைத்தியசாலையில் 10 பேரும் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 180 நோயாளிகளில் 44 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 பேர், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது என்றும் அதில் 3 வெளிநாட்டவர்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி, ஒரு வெளிநாட்டவர் உட்பட கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 255 பேர் நடுமுழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.