நாடு முழுவதும் 2 ஆயிரத்து 300இற்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 42 பேரும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தில் 113 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளதுடன் உயிரிழப்பு 2 ஆகப் பதிவாகியுள்ளது.