143 பேருடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL-1195 என்ற விமானம் சற்ரமுன்னர் நாட்டை வந்தடைந்தது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கியிருக்கும் மாணவர்களை அழைத்துவரும் பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்று பெங்களூரில் இருந்து 124 இலங்கை மாணவர்களும் இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களும் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்களும் கடந்த வாரங்களில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.