கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் பரவாமல் தடுப்பதற்காகவே இந்தக் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மண்டலங்களுக்குள் இருப்பவர்களுக்குத் தேவையான இன்றியமையாப் பொருட்களை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், உள்ளூர் நிர்வாகத்தினர் நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.
அதிக அளவாக மும்பையில் 381 கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் புனேயில் 20 மண்டலங்கள் என மகாராஷ்டிரத்தில் 401 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 220, மத்தியப் பிரதேசத்தில் 180, உத்தரப் பிரதேசத்தில் 105, தெலுங்கானாவில் 125, ஆந்திராவில் 121 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. மேலும் ராஜஸ்தானில் 38, டெல்லியில் 23 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.