தொற்றை, நிவர்த்தி செய்ய ஒரு தேசிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மூலோபாயத்திற்காகக் கூட்டாட்சி அரசு கூடுதலாக 1.1 பில்லியன் டொலர்களைச் செலவிடவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இழப்பினால், என்ன செய்வதறியாது கனேடிய அரசு திணறி வருகின்றது. இந்த நிலையில் பிரதமர் இந்த நிதியினை ஒதுக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இப்போது பொது சுகாதார நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் கனடா சரியான பாதையில் தொடர்ந்து வருவதால், அடுத்த வாரங்களைப் பற்றி மட்டுமல்ல, அடுத்த மாதங்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
தடுப்பூசிக்காக காத்திருக்கும்போது, வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த இடைக்கால மருத்துவ தலையீடுகளில் முன்னேற்றம் தேவைப்படும்’ என கூறினார்.
இதில், கனடாவில் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் உருவாக்கி உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிக்காக 115 மற்றும் அதற்கு மேற்பட்ட மில்லியன் டொலர்கள்.
கொவிட்-19 உடன் தொடர்புடைய கடுமையான சுவாசக் கோளாறுகளின் தாக்கங்கள் மற்றும் தீவிரத்தை குறைக்க ஒரு சாத்தியமான உயிரணு சிகிச்சையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யும் ஒரு சோதனை உட்பட, அத்துடன் மருத்துவ பரிசோதனைகள், மூளை மற்றும் காற்றுப்பாதை உயிரணுக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்கான ஆராய்ச்சி திட்டங்களுக்காக 662 மில்லியன் டொலர்கள்.
கனடாவில் கோவிட்-19 இன் தேசிய சோதனை, மாதிரி எடுத்தல், தரவு கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக்கு 350 மில்லியன் டொலர்கள்.