கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின்படி, சென்னையில் பெருங்குடி- ஜெம், அடையார் மலர், தரமணி வி.எச்.எஸ், மயிலாப்பூர் சி.எஸ்.ஐ கல்யாணி, மியாட், விஜயா ஆகிய மருத்துவமனைகளும், கோவையில் கே.ஜி மற்றும் கொங்குநாடு மருத்துவமனை ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளன.
மதுரையில் வேலம்மாள், சேலத்தில் விநாயகா மிஷன், திருவள்ளூரில் ஏ.சி. எஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா , வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை உள்ளிட்டவைகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 37 மாவட்டங்களிலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க எந்தெந்த தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரமும், சுகாதாரத்துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.