தமிழகத்தில் 11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், அதற்காக சில விதிமுறைகளையும் விதித்துள்ளது.
அந்த விதிமுறைகளை பின்பற்றியே பரிசோதனைகளை மேற்கொள்வதாக தனியார் ஆய்வகங்கள் தெரிவித்துள்ளன. (மேலும் மருத்துவரின் உரிய பரிந்துரையுடனேயே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்வதாக கூறும் மருத்துவர்கள், தன்னிச்சையாக வருவோருக்கு பரிசோதனை செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அதே போல் மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது போன்றவையும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.