இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மொத்த எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், விழுப்புரத்தில் 7 பேரும் கடலூரில் 6 பேரும் தென்காசியில் 4 பேருக்கும் இன்று வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.
இதனைவிட திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் தலா 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 இற்கும் கீழாக இருந்தநிலையில் இன்று சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.