செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இந்த வார இறுதிக்குள் நகரின் லெனெக்ஸ்போ கண்காட்சி மையத்தில் இந்த தற்காலிக மருத்துவமனை திறக்கப்படவுள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி 2,700 கொரோனா வைரஸ் தொற்றுகளும் 20 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக 70,000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளும் 615 இறப்புகளும் உள்ளன.
ரஷ்யாவின் சுகாதார அமைப்பு தொற்று பரவலை சமாளிக்க உதவுவதற்காக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உட்பட, கொரோனா வைரஸ் தொற்று குறித்து தங்கள் கவனத்தைத் திருப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 16 புத்தம் புதிய மருத்துவமனைகளை உருவாக்கி வருகிறது, இதில் மொஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்குப் பகுதிகள் மற்றும் வோல்கா நதிப் பகுதிகள், சைபீரியா மற்றும் தூர கிழக்கு நாடுகளும் அடங்கும்.
புதிய மருத்துவமனைகள் எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் முழுமையாக தயாராக இருக்கும் என்று அமைச்சகம் எதிர்பார்க்கிறது.