அறவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று(வியாழக்கிழமை) வரையான காலப்பகுதியில் ஊரடங்கை மீறிய 2 இலட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறிப் பயணித்த 2 இலட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதற்கான அபராதமாக இதுவரை 2 கோடியே 68 இலட்சம் இந்திய ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் வரை 1 கோடியே 46 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் பெறப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் நேற்று வரையான ஒரே நாளில் ஒரு கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.