வழங்கப்படும் மருந்துகளை வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மூவர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில் ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை மற்றும் வயதை பொறுத்து எச்.ஐ.வி.க்கு வழங்கப்படும் ‘லோபினாவிர்’ மற்றும் ‘ரிடோனாவிர்’ ஆகிய மருந்துகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு, சிறுநீரக கோளாறு, நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்துகளை வழங்க நேற்று முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.