நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையிலேயே தனது டுவிட்டர் பக்கம் ஊடாக மோடி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
“கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக அரசு மேற்கொண்டு வரும் போா்க்கால நடவடிக்கைகளுக்காக உதவிக்கரம் நீட்டுவதற்கு பல்வேறு தரப்பினா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அதை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், ‘அவசர காலங்களில் குடிமக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நிதி’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பேருதவி புரியும்.
வரும் காலங்களில் ஏற்படும் பேரிடா்களின்போதும் இந்த நிதி பயன்படுத்தப்படும். எனவே, மக்கள் அனைவரும் அந்த நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்“ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.