பின்னர் மலேசியாவின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து கட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு மலேசிய மன்னர் இதனை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மலேசியாவின் அரண்மனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் உட்துறை அமைச்சர் முகைதீன் யாசின் மலேசியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியில் சில பிரிவினர் வலியுறுத்திய நிலையில், முகைதீன் யாசின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.