மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஆதரவு தரவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 9 மணிக்கு நிறைவடையவிருந்த சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.