கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது.
இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அதிகமாக கூட்டம் கூட வேண்டாம், அத்தியாவசிய இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுங்கள், வெளியில் சென்று வந்தவுடன் கைகளை சானிடைசர் போட்டு கழுவுங்கள் போன்ற அறிவுறுத்தல்களை அரசு வழங்கி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது முதலே முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்கத் தொடங்கினர்.
இதனால் முகக்கவசம், சானிடைசருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில விற்பனையாளர்கள் சானிடைசர், முகக்கவசத்தை பல மடங்கு விலை ஏற்றி விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை அரசு கடுமையாக எச்சரித்ததோடு, மக்களை இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, செயலி ஆகியவை மூலம் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவித்துள்ளது.