தேசியம் அழியும் நிலையே உருவாகுமென வவுனியா நகரசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தருமான சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சந்திரகுலசிங்கம் மோகன் மேலும் கூறியுள்ளதாவது, “திருக்கேதீஸ்வர வளைவு பிரச்சினையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீர்த்திருக்க வேண்டும்.
ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத தரப்புகளை உள்ளடக்கிய வகையில் அந்த பிரச்சனையை காலம் தாழ்த்தாது இவர்கள் தீர்த்திருக்க வேண்டும்.
மேலும் இன்று சைவமதம் சார்ந்த கட்சி உருவாக்கபட்டு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதேபோல கிறிஸ்தவ மதமும் கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளது.
இந்தநிலை மாற்றப்பட வேண்டும். எமது கலை கலாசாரங்கள் வளர்க்கபட்ட வேண்டும். எனினும் அவர், அவர் தனித்துவங்கள் பேணப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எனவே தேர்தலிற்கு முன்னராவது வன்னியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த விடயத்தில் சிறந்த ஒரு முடிவினை எடுக்கவேண்டும். இல்லாவிடில் தமிழினம் பாரிய ஒரு பின்னடைவை சந்திக்க வேண்டி ஏற்படுவதுடன் தமிழ் தேசியம் அழிவை நோக்கி பயணிக்கும் என்பதில் ஜயமில்லை.
இதே செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்கள் இருப்பதற்கு கூட இடமில்லாத நிலைமை ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.