உட்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், “டெல்லியில் நடந்த வன்முறை பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. வன்முறைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று இருவரும் பதவி விலக வேண்டும்.
டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை கேட்டு நாளை சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லி பொலிஸ், யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உட்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயற்படுகிறது. வன்முறையில் பலர் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதன் மூலம் அரசியல் தலையீடு இருப்பது உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.