விழிர்ப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் மன்னாரில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) மாலை மன்னார் பஸார் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் உட்பட இளைஞர்கள் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு துண்டு பிரசுரத்தை மக்களுக்கு வழங்கி வைத்ததோடு விழிப்புணர்வு பதாதைகளையும் காட்சிப்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய குறித்த துண்டுப்பிரசுரங்கள் மன்னார் பஸார் பகுதி, அரச தனியார் பேரூந்து தரிப்பிடம், மன்னார் பிரதான பாலத்தடி போன்ற பகுதிகளில் மக்கள், படையினர் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.