குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தமையால் பலர் உயிரிழந்தனர். அத்துடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த ஐவர் உயிரிழந்துள்ளதை அடுத்து குறித்த கலவரத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை குறித்த கலவரம் தொடர்பில் விளக்கமளிக்குமாறும், இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.