எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
தெசலோனிகி பகுதியில் புதிதாக ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஜப்பானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அயர்லாந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியுசிலாந்திலும் பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து விமானம் ஊடாக நியுசிலாந்திற்கு வருகை தந்த பெண்ணொருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரிலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.