அலைவரிசைகள் கறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இன்று முதல் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு பாடலுக்கும் அந்தப் பாடலின் உரிமையாளர்களுக்கு பணம் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இதன்படி, வானொலியில் ஒலிபரப்பப்படும் ஒரு பாடலுக்கு ரூ.20 மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடலுக்கு ரூ.100 வீதம் செலுத்த வேண்டுமென வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.