துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் இருப்பதாக ஆய்வென்றில் மூலம் தெரியவந்துள்ளது.
இதில், குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு பெண்கள் துவிச்சக்கர வண்டிகளிலேயே தங்களது வேலைகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்கூவர் சைக்கிள் கூட்டணி மற்றும் டிரான்ஸ்லிங்க் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னணி ஆராய்ச்சியாளர் கவின் டேவிட்சன் கூறுகையில், ‘சைக்கிள் ஓட்டுதல் மெட்ரோ வான்கூவரில் வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து முறை.
சைக்கிள் ஓட்டுதல் வீதங்களைப் பொறுத்தவரை, 2006ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில் சைக்கிள் ஓட்டுதல் வீதத்தில் 64 சதவீதம் அதிகரிப்பு கண்டுள்ளோம்.
மெட்ரோ வன்கூவரில் வீதிகளில் கார்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை தசாப்தங்களின் தரவு காட்டுகிறது.
மெட்ரோ வன்கூவரில் வீதிகளில் கார்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை தசாப்தங்களின் தரவு காட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.
மெட்ரோ வன்கூவரில் 4,595 கிலோமீட்டர் துவிச்சக்கர வண்டி ஒடுபாதைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.