செயற்படுத்த தடை விதிக்க வேண்டுமென கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும் பொதுமக்கள் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிபதிகள், மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகி இருக்கவேண்டும் என்று கூறினார்கள்.
அதற்கு பதிலளித்து மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, “இந்திய அளவில் இந்த அரசாணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்” என வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.