குறித்த வனப் பகுதியில் தீ வேகமாகப் பரவி வருவதால் மேலும் பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
உஷ்ணமான கால நிலையால் இந்தத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மனித செயற்பாடு உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பொலிஸாரும், பத்தனை பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.