பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற பகுதியிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் நிர்வாணமாக்கப்பட்டு பாறை கற்களால் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய ரங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸ் ஆய்வாளர் பாலகிருஷ்ணா “கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வயது முதல் 30 வரை இருக்கும். அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அடையாளம் தெரியாதவாறு முகம் சிதைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும்” என்று கூறியுள்ளார்.