தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்தம், கையெழுத்தாகவுள்ளது.
கட்டார் தலைநகர் டோஹாவில் இன்று (சனிக்கிழமை) இந்த வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம், கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு நிகழ்வில், ரஷ்யா, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும், சிறப்பு மிக்க இந்த அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
அல்-கொய்தா தீவிரவாதிகளை அழிக்க கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால், அல்-கொய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம் அங்கு முகாமிட்டது.
இதன்பிறகு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவத்தை வெளியேற்ற தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் அதிகரித்தன.
இதனால், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இருதரப்புக்கும் பொதுவான கட்டார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்பட்டு கடந்த வாரம் ஒரு வார போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.