கொண்டு கல்விசார் கூட்டுறவு அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடுமூலம் திறமையான மனிதவள முகாமைத்துவ நிபுணர்களை விருத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழக வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவக் கற்கைகள் பீடமானது CIPM அமைப்புடன் இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பம்மை மடுவில் அமைந்துள்ள யாழ். பல்ககைழக வவுனியா வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்பட்டது.
யாழ். பல்கலைகழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியான கந்தசாமி மற்றும் CIPM இன் தலைவரான தம்மிக பெர்ணாண்டோ ஆகிய இருவராலும் வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன், வியாபார முகாமைத்துவ பீடாதிபதி நந்தகோபன், முகாமைத்துவ தலைவர் கொட்வின் பிலிப், CIPMஇன் தலைவர் நீல் போககலந்தே, கல்வி விவகாரப் பணிப்பாளர் வீரதுங்க மற்றும் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
தேசிய மற்றும் சர்வதேச மனிதவளத்தின் பயன்பாட்டை மேம்படுத்தவதன் பொருட்டு மனிதவள முகாமைத்துவத்தின் மூல தத்துவம் நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்வதை கருத்திற்கொண்டு பொது விருப்புகளை பின்பற்றுவதற்காக இரு நிறுவனங்களும் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இதன்மூலம் வவுனியா வளாக வியாபார கற்கைள் பீடத்தில் CIPMஇன் மனிதவள நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.