அரசாங்க அதிபர் இல்லாத நிலையில் இன்று புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த நிர்வாக சேவை உத்தியோகத்தரான கே.விமலநாதன் இன்று (சனிக்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் பிரதேச செயலாளராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் செயற்பட்டிருந்தார்.
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் மாவட்டச் செயலகத்திற்குச் சென்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இவரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் வரவேற்றனர்.
மட்டக்களப்பு, சிவானந்தாக் கல்லூரி அமையப்பெற்றுள்ள காணியின் பெரும்பாலான பகுதி முல்லைத்தீவு புதிய அரசாங்க அதிபருடைய குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டவை என அறியக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு சேவையாளர் பின்னணியில் இருந்து வந்த இவர் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கும் நல்ல பல சேவைகளைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.