ஓமனில் இருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியியலாளர், டெல்லி சென்று திரும்பிய 20 வயது இளைஞர், அயர்லாந்தல் இருந்து வருகை தந்த 21 வயது இளைஞர், ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் தமிழகம் வந்திருந்த 2 தாய்லாந்து நாட்டவர்கள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த பயணி ஒருவருக்கு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலின் ஊடாக தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.