உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையில் அவர் வெளிநாடு செல்ல முடியும் என நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு வெலிக்கடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின்போது சாட்சிகளை மறைத்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.