வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஒரு பரந்த கூட்டணியாக ‘யானை’ சின்னத்தின் கீழ் ஐ.தே.க. தொடர்ந்து போட்டியிடும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான குறித்த கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றும் வஜிர அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.
மக்கள் தற்போது பலவேறு பிரச்சினைகளை எதிகொள்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்து அந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் காணப்படுவதாகவும் கூறினார்.
எனவே ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் பொதுமக்கள் மேலும் சுமைகளுக்கு உள்ளாவதனை தடுக்க வேண்டும் எனவே ஜனநாயக முறையில் அதிகாரத்தில் சமநிலையை உருவாக்கும் வகையில் மக்கள் செயல்பட வேண்டும் என்றார்.