எனினும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையால் மக்களின் பிரசன்னம் தவிர்க்கப்பட்டு 10 பேர் அளவில் கலந்துகொண்டு இவ்விழாவை நடத்த ஆலய நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.
இதுகுறித்த அறிவிப்பை ஆலய நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதில், “நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காணரமாக ஆலய பங்குனி உத்தரத் திருவிழாவில் மக்கள் கலந்துகொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று 30ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிவரை உற்சவ காலப்பகுதியாகும்.
பிரசித்திபெற்ற புளியம்பொக்கனை நாகதம்பரான் ஆலயத்தின் பங்குனி உத்தர பொங்கல் திருவிழாவில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழமை என்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இம்முறை திருவிழா, மக்கள் வருகை மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.