இருவரும் கொரொனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலியிலிருந்து வந்த இலங்கை பிரஜைகள் இருவரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு அங்கொட தொற்றுநோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன், குறித்த இருவரும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள் இருவருடன் மேலும் இருவரும் அங்கொட தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த இருவரும் கொரொனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது